தொடக்கநிலை வழிகாட்டி·Zero to Hero

C Programming என்றால் என்ன? ஏன் இன்னும் முக்கியம்?

C 1972-ல் உருவாக்கப்பட்ட மொழி, ஆனால் இன்றும் மிக முக்கியமானது. Linux, Windows-ன் பகுதிகள், embedded devices (washing machine, car, router) பெரும்பாலும் C-ல் எழுதப்பட்டவை. பல கல்லூரிகளில் முதல் programming பாடம் C தான்.

SPSkill Park AcademyErode · Chennai 7 நிமிட வாசிப்பு புதுப்பிக்கப்பட்டது 6 Oct 2026

உங்கள் முதல் C program

printf() திரையில் காட்டும்; \n புதிய வரி. Run செய்து பாருங்கள்.

நீங்களே முயற்சி செய்யுங்கள்

C
Output Loading C (first time takes a few seconds)
Press Run to see the result here.

C ஏன் கற்க வேண்டும்?

  • கணினி memory எப்படி வேலை செய்கிறது என்று புரியும் (pointers).
  • C++, Java போன்ற மொழிகள் C syntax-ஐப் பின்பற்றுகின்றன.
  • Embedded, automotive, electronics வேலைகளுக்கு அவசியம்.
  • Campus tests-ல் C output கேள்விகள் அடிக்கடி வரும்.

Pointers: C-ன் சிறப்பு

Pointer என்பது ஒரு variable-ன் address-ஐச் சேமிக்கும் variable. இதன் மூலம் function-ல் இருந்து நேரடியாக மதிப்பை மாற்றலாம்.

நீங்களே முயற்சி செய்யுங்கள்

C
Output Loading C (first time takes a few seconds)
Press Run to see the result here.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

C அல்லது Python, முதலில் எதைக் கற்க வேண்டும்?

College syllabus-ல் C இருந்தால் C; இல்லையெனில் Python எளிதான தொடக்கம்.

C இன்னும் பயன்படுகிறதா?

ஆம். Operating systems, embedded systems, databases-ல் அதிகம் பயன்படுகிறது.

மேலும் படியுங்கள்